அருள்மிகு திருநிலைநாயகி உடனுறை பிரம்மாபுரீஸ்வரர் திருக்கோவில் - சீர்காழி
Hanuman Temple Tour - +91 98411 01711
அருள்மிகு திருநிலைநாயகி உடனுறை பிரம்மாபுரீஸ்வரர் திருக்கோவில் - சீர்காழி
Hanuman Temple Tour - +91 98411 01711
இருப்பிடம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில்
| சமயக்குரவர்களில்
ஒருவரான திருஞானசம்பந்தர், சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர்- பகவதி
அம்மையார் தம்பதியரின் மகனாகப் பிறந்தார். இவரை முருகனின் அம்சம் என்றும்,
இளைய பிள்ளையார் என்றும் வழங்குவர். இவர் தனது மூன்றாவது வயதில் தந்தையுடன் இத்தலத்திலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராட வந்தார். தந்தை இவரை குளக்கரையில் உட்காரவைத்து விட்டு, தான் மட்டும் நீராடச் சென்றார். அப்போது சம்பந்தருக்கு பசி ஏற்பட, "அம்மா! அப்பா!' என அழுதார். இவரது அழுகுரல் கேட்ட சிவன், பார்வதியை நோக்கி குழந்தையின் பசிக்கு பால் கொடுக்குமாறு கூறினார். அதன்படி சிவனுடன் சம்பந்தருக்கு தரிசனம் தந்து மெய்ஞானம் கலந்த பாலை புகட்டினாள் அம்பிகை. பசி தீர்ந்த சம்பந்தர் வாயில் பால் வழிய அமர்ந்து விட்டார். குளித்து விட்டு வந்த தந்தை, ""பால் கொடுத்தது யார்? யாராவது ஏதாவது கொடுத்தால் வாங்கிச் சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா? அபச்சாரம் செய்து விட்டாயே,'' எனச்சொல்லி குச்சியால் சம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார். அப்போது சம்பந்தர், சிவனும் பார்வதியும் தரிசனம் தந்த திசையை காட்டி, ""தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடி காடுடைய சுடலைப்பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன் ஏடுடைய மலரான் உனை நாட்பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரம்மாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே'' என்று பாடினார். தந்தை அசந்து போனார். தன் குழந்தைக்கு இறைவனே காட்சி தந்து பாலூட்டியது அறிந்து பரவசப்பட்டார். இத்தலத்தைபற்றி சம்பந்தர் 67 பதிகங்களும், திருநாவுக்கரசர் 3 பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர். |
ஏழு
தீவுகள் அடங்கிய இந்தப் பேரண்டத்தை, ஒரு சந்தர்பத்தில் கடல் பொங்கி
அழித்தது. அப்போது சீகாழி திருத்தலம், பிரளய வெள்ளத்திலும் தோணியாக மிதந்து
அழியாதிருந்தது. இதனால் இவ்வூர் “தோணிபுரம்’ என்றும் போற்றப்படுகிறது.
மஹாவிஷ்ணு
மாவலி மன்னனின் வேண்டுகோளின்படி தனது மூன்றாவது அடியை அவன் தலை மேல்
வைத்து பாதாள உலகில் செலுத்தினார். பின்னர், அகங்காரம் ஏற்பட்டு பூமியை
நடுங்கச் செய்தார். இதையறிந்த சிவாம்சமான வடுக பைரவர், தமது திருக்கரத்தால்
விஷ்ணுவை மார்பில் அடித்து பூமியில் வீழ்த்தினார். இதையறிந்த மஹாலட்சுமி
மாங்கல்ய பிச்சை கேட்க, மஹாவிஷ்ணுவை மீண்டும் உயிர் பெற்று எழச்செய்தார்
பரமேஸ்வரன்.
பின்னர்
திருமாலின் வேண்டுகோளுக்கிணங்க, இறைவன் அவரது எலும்பைக் கதையாகக்
கொண்டும், தோலைச் சட்டையாகப் போர்த்தியும் காட்சி தந்தார். இதனால் சீகாழி
பைரவருக்கு “சட்டை நாதர்’ என்ற திருப்பெயர் ஏற்பட்டதாக வரலாற்றுப்பதிவுகள்
தெரிவிக்கின்றன.
சிர்காழி சிவன் கோவில், இங்கு சிவன் முன்று நிலைகளில் காட்சி தருகிறார்
முதல் நிலை பிரம்மாபுரீஸ்வரர் சுயம்பு லிங்கம் , ( கீழ் தளம் )
இரண்டாம் நிலை தோணியப்பர் , ( முதல் தளம் )
முன்றாம் நிலை சட்டநாதர் ( இரண்டாம் தளம் )
| மூலவர் | : | சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர் | |||
| உற்சவர் | : | சோமாஸ்கந்தர் | |||
| அம்மன்/தாயார் | : | பெரியநாயகி, திருநிலைநாயகி | |||
| தல விருட்சம் | : | பாரிஜாதம், பவளமல்லி,மூங்கில் | |||
| தீர்த்தம் | : | பிரம்ம தீர்த்தம் முதலாக 22 தீர்த்தங்கள் | |||
| பஞ்சரத்திர | |||||
| பழமை | : | 2000 வருடங்களுக்கு முன் | |||
| புராண பெயர் | : | பிரம்மபுரம், சீகாழி | |||
| ஊர் | : | சீர்காழி | |||
| மாவட்டம் | : | நாகப்பட்டினம் | |||
| மாநிலம் | : | தமிழ்நாடு |
| ஊழிக்காலத்தில்
உலகம் அழிந்த பின் சிவபெருமான் 64 கலைகளையும் ஆடையாக தரித்து, "ஓம்' என்ற
பிரணவமந்திரத்தை தோணியாக்கி, உமா மகேஸ்வரராக வருகையில், ஊழிக்காலத்திலும்
அழியாத இந்த சீர்காழி தலத்தை பார்த்தார். இதுவே எல்லாவற் றிற்கும் மூல க்ஷேத்திரம் என்று தோணியுடன் இத்தலத் தில் எழுந்தருளி தோணியப்பர் என பெயர் பெற்றார். அம்பாள் திருநிலை நாயகி எனப்பட்டாள். இங்கு சிவனை பிரம்மா பூஜித்ததால் பிரம்மபுரீசுவரராக லிங்க வடிவிலும், ஆணவங் களை அழிப்பவராக சட்டை நாதராகவும், பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளாக அருள்பாலிக்கிறார். இவர்கள் தான் சம்பந்தருக்கு காட்சி கொடுத்து அருள்பாலித்தவர்கள். இது குரு மூர்த்தம் எனப்படும். உச்சியில் உள்ள அடுக்கில் சட்டைநாதர் அருள்பாலிக்கிறார். இவர் சிவனின் அம்சங்களில் பைரவ அம்சமாக திகழ்கிறார். மகாபலி சக்கரவர்த்தியை அழித்த தோஷம் விஷ்ணுவிற்கு பிடித்து கொண்டது. விஷ்ணு வேறு, தான் வேறு இல்லை என்பதால் அவரது தோலை, சிவன் சட்டையாக அணிந்து கொண்டார். ஆண்கள் சட்டை அணியக்கூடாது. சட்டங்களுக்கெல்லாம் இவரே அதிபதி என்பதால், வழக்குகளில் பிரச்னை உள்ளவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு. பிரம்மனுக்கு ஏற்பட்ட அகங்காரம் நீக்கிய தலம். பிரளய காலத்தில் பார்வதிக்கு ஞான உபதேசம் செய்த தலம். இத்தல அம்மன் மகாலட்சுமி சொரூபமாக சக்தி பீடத்தில் 11வது பீடமாக அமர்ந்துள்ளார். இங்கு வந்து வணங்கினால் தான் என்ற அகங்காரம் நீங்கி ஞானம் கிடைக்கும். பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, மூலவர், உற்சவர் என அனைவருமே மூலஸ்தானத்தில் கைலாய காட்சியில் உள்ள ஒரே தலம் சீர்காழி தான். காசியை காட்டிலும் மிகப்பெரிய பைரவ க்ஷேத்திரம். இங்கு அசிதாங்க பைரவர், ருருபைரவர், சண்டபைரவர், குரோத பைரவர், உண்மத்த பைரவர், சம்ஹார பைரவர், பீஷண பைரவர், அகால பைரவர் என அஷ்ட பைரவர்களும் உருவமாக உள்ளனர். எனவே தான் காழியில் பாதி காசி என்பர். இவர்களது சன்னதிக்குள் சட்டை அணிய அனுமதியில்லை. அஷ்டமி திதிகளில் சிறப்பு பூஜை உண்டு. 18 சித்தர்களில் ஒருவரான சட்டை முனி சித்தர் இங்கு ஜீவ சமாதி ஆகி உள்ளார். சிவன் கோயில் பிரகாரத்தில் இவரது ஜீவ சமாதிக்கு மேல் ஒரு பீடம் உள்ளது. இங்கிருந்தபடியே உச்சியிலிருக்கும் சட்டைநாதரை தரிசிக்க முடியும். வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு இந்த பீடத்திற்கு அபிஷேகம் நடக்கும். இரவு 12 மணிக்கு இதற்கு புனுகு சட்டம் சாத்தி, வடை மாலை அணிவித்து, பாசி பருப்பு பாயசம் நைவேத்யம் செய்யப் படுகிறது. குன்றுக்கோயில் உருவான வரலாறு : உரோமச முனிவர் கயிலை சென்று, சிவனை நோக்கி தவம் செய்து, ""இறைவா! பக்தர்களின் குறை தீர்க்க தென்திசையில் தேவியுடன் எழுந்தருளி கயிலை தரிசனம் தரவேண்டும்,'' என வேண்டினார். ஒருசமயம் ஆதிசேஷனுக்கும் வாயு தேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி நடந்தது. இதில் ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளால் கயிலையை மூடிக்கொண்டார். வாயுவால் மலையை அசைக்க கூட முடியவில்லை. தேவர்களின் வேண்டுகோளின் படி ஆதிசேஷன் ஒரு தலையை மட்டும் தூக்க, வாயுவின் வேகத்தினால் சிறு பகுதி பெயர்ந்தது. இறைவனின் அருளால் இந்த சிறு மலையை 20 பறவைகள் சீர்காழிக்கு கொண்டு வந்து சேர்த்தன. காலவித்து என்னும் மன்னனுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. கயிலை சென்று இறைவனை வணங்கினால் தான் புத்திர பாக்கியம் கிடைக்கும் என பெரியவர்கள் கூறினர். அவன் சின்னக் கயிலையான சீர்காழிக்கு வந்து இறைவனை வணங்கி, குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெற்றான். இக்கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட குன்றுக்கோயிலாக விளங்குகிறது. கீழ் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அருள்பாலிக்கின்றனர். இது லிங்க மூர்த்தம் எனப்படும். இவருக்கு 6 கால பூஜை நடக்கிறது. படைக்கும் தொழிலைச் செய்த பிரம்மா, தானே உலகில் பெரியவன் என அகங்காரம் கொண்டார். இந்த அகங்காரத்தைப் போக்குவதற்காக சிவபெருமான், பிரணவ மந்திரத்தை பிரம்மனுக்கு மறக்க செய்தார். இதனால் வருந்திய பிரம்மன் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். இதனால் இத்தல இறைவன் பிரம்மபுரீஸ்வரர் ஆனார். நடு அடுக்கில், உமா-மகேஸ்வரர் உள்ளனர். இவரை "தோணியப்பர்' என அழைக்கிறார்கள். இவருக்கு 4 கால பூஜை நடக்கிறது. இந்தக் குன்றையும் . "தோணிமலை' மலை கோவில் என்கின்றனர். |
Temple Histroy
Sirkazhi, known for the famous temple for Lord Shiva known as Brahampureesar, is also associated with the birth of Tirugnanasambandar, one of the 3 most revered Nayanmars of that time. When Sambandar as a 3 years old child was crying on the banks of the temple tank, Goddess Parvati appeared in person and fed him with Gnanapaal, (wisdom of milk). Thereafter, Sambandar started singing in praise of the God Shiva with his first and famous Pathigam "Thodudaya Sevian".Accoding to mythology, when the great deluge (pralayam) started submerging the whole earth, God Shiva carried the 64 arts in a Thoni (boat) with him and landed at Sirkazhi which was not submerged in the great deluge. God Brahma after worshipping Shiva here, started afresh his job of creating life forms. Becuase Brahma worshipped Shiva, he is known here as Brahmapureesar and also as Thoniappar for carrying the 64 arts with him in the Thoni (boat).
Temple: The Shiva temple at Sirkazhi is a big complex and there are 3 separate shrines for God Shiva here - Brahmapureesar, Thoniappar and Sattnathar. The main shrine for Brahmapureesar is on the banks of temple tank facing east. The shrine for Thoniappar is situated on an elevated site to the west of the main shrine. The Sattanathar shrine can be reached from the southern side pathway of Thoniappar shrine by climbing a few steps. The shrine for Tirugnanansambandar is located on the outer prakram. The female deity Thirunilaianayagi's shrine is situated adjacent to Sambandar shrine.
Brahma, Murugan, Kali, Guru, Indiran, Chandran, Suryan and Sage Vyasar are believed to have worhsipped the god Shiva at this place.
One of the 108 Divya Desam shrines for Lord Vishnu is also situated at Sirkazhi at a distance of 100 meters from the old bus stand.
No comments:
Post a Comment